பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தோற்றத்தையும் நடுக்கத்தையும் கண்ட மன்னன், இவன் கூற வந்திருக்கும் செய்தி துயரம் விளைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனைத் தனக்கு மிகப்பக்கத்தில் இருகோல் எல்லையுள் அழைத்தான். வராகன் நெருங்கி வந்ததும், “வந்தது யாது கூறவோ? அதனை விரைவில் கூறு” என்று ஆணை பிறந்தது.

தரையில் முடிதோய மன்னனை வணங்கி எழுந்த வராகன், தயங்கித் தயங்கி நின்றானே ஒழிய வாய்திறந்து நடந்ததைக் கூற அஞ்சினான். “நெஞ்சில் அஞ்சாது நிகழ்ந்ததைக் கூறு” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் மீண்டும் ஆணையிட்டான் பிரச்சோதனன். இப்போது வராகனுக்குச் சிறிது துணிவு பிறந்தது. அரசன் தன் உயிருக்கு அபயமளிப்பான் என்ற நம்பிக்கையும் தோன்றியது.

நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாகக் கூறினான்: “உதயணன் தத்தையுடன் பிடியேறித் தன் நாடு நோக்கிச் செல்கிறான். பின்பற்றிச் சென்ற நம் படை மாற்றார் படையால் அழிந்து தடை யுற்றது. யான் விரைந்து பிடியைப் பின்பற்றி நெருங்கினேன். ‘தத்தையை என்பால் அடைக்கலம் அளித்த உங்கள் வேந்தர் பிரானுக்கு என் வணக்கத்தைக் கூறுக’ என்று கைகூப்பி விட்டுக் காற்றென விரைவுடன் பிடியைச் செலுத்தி மறைந்தான் உதயணன்” என்று வராகன் கூறியதும் பிரச்சோதனனுடைய விரிந்த மலர்விழிகள் சிவந்தன. புருவங்கள் நெரிந்தன. முகத்தில் சினத்தி எழுந்து பரவிப் படர்வது தெரிந்தது. உதயணன் துரோகம் செய்துவிட்டான் என்பது அவனுக்கு விளங்கிற்று.

“உதயணனை எதிர்த்து உடனே நம்படை புறப்படட்டும் எள்ளி விளையாடுகிறதுபோலும் இளமை. நல்ல பண்புள்ளவன் என் நம்பினேன். நம்பிக்கையைச் சிதைத்து விட்டான் வத்தவர் கோன். நான் யாரென அறியான்போலும். செல்லட்டும் நம் படை. அந்தச் சிறு மன்னனைப் பிடித்து இழுத்து வாருங்கள்.” இவ்வாறு சினங்கொண்டு முழங்கினான் பிரச்சோதனன்.முகத்