பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. கோவேந்தன் 7

மெய்ம்மையின ஆட்சி எவ்வளவு புகழ்மிக்கது! புனிதத் தன்மையின் பேரின் பம் சொற்களால் சித்தரிக்க முடி கயாதது!

உண்மைக்காகவே தவற்றையும் மெய்மைக்காகவே பொய்த் தோற்றமளிக்கும் மாயையையும் உதறித் தள்ளி விட்டோம்.

தவற்றிகும் குழப்பத்திற்கும் புறமுதுகைக் காட்டி புள்ளோம்.

அறத்திற்கும் உண்மைக்கும் உள்ள ஒற்றுமைக்கு நாம் முகத்தைக் காட்டிக் கொண்டோம்.

2

கனவு காண்பது பாவம். பாவத்தை விரும்புவது இருளை விரும்புவதாகும்.

விழித்தெழுந்தவர்கள் அறிவார்ந்த செயல்களையே விரும்புகிறார்கள். ஆனால் கனவு கண்டு கொண்டிருப்பதை யல்ல!

ஒளியைக் காட்டிலும் இருளையே விரும்பமாட்டார்கள்.

யார் இருளை விரும்புகிறார்களோ, அவர்கள் இருளிலேயே ஈடுபட்டிருப்பவர்களாகின்றனர்.

அவர்கள் இதுவரை ஒளியைக் காணாதவர்கள்

இருளைக் கண்டு கொண்டவர், இருளிலே நடந்து செல்ல விரும்ப மாட்டார்.

உண்மையை அறிய வேண்டுமானால், அதனை முழு மனத்துடன் விரும்பவேண்டும்; ஒப்பிடும்போது தவற்றுக்கு எவ்வித வனப்புமில்லை.