பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் Q7

எங்கு நட்பமைதி நிலைக்கிறதோ, அங்கு நலிக்கும் சச்சரவு ஒழிக்கப்படுகிறது;

எங்கு அன்பு உள்ளதோ அங்கு வெறுப்பு அற்றுப் போகிறது;

எங்குத் தூய்மை உள்ளதோ, அங்கு எல்லாத் தீவினை களும் தோற்கடிக்கப்படுகின்றன.

உண்மையின் உறைவிடத்தை விட்டு எல்லாத் தவறு களும் தப்பி ஓடிவிடும்.

இதுவே, காலை வேளையின் இனிய மகிழ்ச்சி, தீமை தோற்கடிக்கப்பட்டு, நன்மை வெற்றியீட்டப்படு கிறது;

உண்மையின் புகழ் வெளிப்படுத்தப்படுகிறது; தவறற்ற நிறைவான நிலைக்குச் செல்லும் வழி நிறுத்தப்பட்டுள்ளது.

தூய்மையான வாழ்வின் பேரின்பம் பங்கு பற்றுகிறது. இவற்றினால் காலை வேளை நிறைவு பெறுகிறதுவெளிச்சத்தினால் இருள் போகிறது. அறியாமை அறிவினாலும், மாயை மெய்ம்மையாலும,

தவறு உண்மையாலும், நீக்கிக் கொள்ளப்படுகின்றன. காலை வேளையின் மாட்சிமை வெளிப்பட்டுள்ளது;

காலை வேளையின் மகிழ்ச்சி, மனத்தின் உணர்ச்சி யினால் பற்றிக் கொள்கிறது;

காலையின் நிறைவு உணரப்படுகிறது;

உங்களில் யார் இதற்காகக் காத்திருந்தீர்களே, அவர்கள் இப்போது வாருங்கள்!