பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வெற்றிமேல் வெற்றி பெற...

கனவு காண்பவன் இப்போது மகிழ்ச்சி அடை கின்றான், இன்னொரு வேளை துன்புறுவான்; இவ்வேளை நம்பிக்கையுடன் இருப்பான், அடுத்த வேளை அச்சத்துடன் இருப்பான். -

அவன் நிலையற்று இருக்கின்றான், ஏனெனில் அவனுக்கு நிலையான புகலிடமில்லை.

பரிவிரக்கம், வஞ்சம், தீர்ப்பு என்ற அச்ச உருவங்கள் அவனைத் துரத்தும்போது, அவனால் எங்கே விரைந்து ஓட முடியும்? விழித்து எழும்வரை அவனுக்குப் பாதுகாப்பான இடம் இல்லை.

கனவு கண்டு கொண்டிருப்பவன், கனிவுடன் போராடிக் கொண்டே இருக்கட்டும்.

தன்னலப் பற்றுள்ள எல்லா ஆசைகளின் பொய்த் தோற்றங்களை உணர்வதற்கு அவன் தொல்லைப் படட்டும்.

ஆம்! அப்போதுதான்் ஒளியும் உண்மையும் நிறைந்த உலகின் மேல் தனது உள்ளொளிக் கண்களைத் திறந்து காண்பான்!

அவன் விழித்தெழுவான், எழுத்து எல்லாவற்றையும், அவறறின் முறையான தொடர்புகளிலும் ஒன்றுக்கொன்றின் விழுக்காட்டு அளவிலும் இருப்பதைக் காண்பான்.

எல்லாமே அந்தந்த நிலையில் இருப்பதைக் கானும் போது, அறமுறை அறிவுள்ளவனாக அமைதி அடைகிறான் *

உண்மையே இப் புடவியின் (ஞாலத்தின்) ஒளி, மனத்தின் பகல்.

அதில் தவறில்லை, மனத்துன்பமில்லை, பயமில்லை. ஒரு பகலின் ஒளியினால் எவன் விழித்து எழுகின்றானோ, அவனின் கனவுகளினால் ஏற்படும் தொல்லைகள் அவனுக்குச் சுமையாகா. -