பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 109

வெறி உணர்ச்சி, பரிவிரக்கம் வாழ்வு, இறப்பு - இவற்றிற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டு மானால்;

எல்லாம் நிறைந்தவரின் முடிவில்லா அமைதிக்குள் துழைய வேண்டும்;

எல்லாம் நிறைந்தவரின் அழிவற்ற நிலையை உணர வேண்டும்;

எல்லாம் நிறைந்தவராகி விடவேண்டும்; எல்லாம் திறைந்தவரே நன்மை தீமைகளுக்கு அப்பாற் பட்ட அந்த தவறில்லாத முழுமை நிலையை உடைய நல்லவர்.

அன்பையும் பகையையும் சமப்படுத்தும் தவறு ஏதுமில்லா நிறைவான அன்பே, அவர்;

வாழ்வாலும் இறப்பாலும் தகர்க்கப்படாத, என்றும் நிலைக்கும் நிலையான வாழ்வே அவர்.

அவரை அறிந்தவன் எவனோ அவனே அவரின் அன்பாகட்டும்.

மாற்றத்தை உண்டாக்கும் எதிர் ஆற்றல்களை அவன்

மாற்றம் அடையாத நிலைக்கு அவன் வரும்வரை; அவ் வகையிலேயே அந்த நிலையான, உறுதிமிக்க யாரையைக் காண முடியும்;

அவரே அருள் பாலிக்கப்பட்ட எல்லாம் வல்லவர், நட்பமைதித் தலைவர்.

எவன் அவரைத் தேட முயலாமல் இருக்கிறானோ அவனால் அவரைப் பார்க்க முடியாது;