பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. கோவேந்தன் j 11

எல்லாத் துயரங்களையும் தாண்டிச் செல்வது அன்பு -

அமைதி வழியில் எல்லாம் நிறைந்தவரை தேடுவ வர்கள், அவரை அடையும் பேற்றைப் பெறுவார்கள்.

நான்காவது முற்றுணர்வு ஆறுதல் இன்மை

மானிடச் சிறுவர்களுக்குத் தூய உள்ளுயிர்ப்பின் குரல்:தீவினையினால் அடிமை படுத்தப்பட்டது-அதுவே இருள்;

பற்றினால் விடுதலை பெறவுள்ளது-அதுவே ஒளி. இருள் படர்ந்த இடம் ஒன்று உள்ளது; மிகுந்த இருளின் இருப்பிடம் அது;

அங்குள்ளவர்கள் ஆறுதலின்மையால் கதறி அழு கிறார்கள்.

அந்த அழுகுரல்கள் தன்னலமுடையவை, அதனால் அவை கேட்பதில்லை.

அவர்களின் கடவுளை அவர்கள் அழைக்கிறார்கள், ஆனால் அமைதி கலைக்கப்படுவதில்லை;

அவர்களுடைய குரலின் எதிரொலியையே அவர்கள் கேட்கிறார்கள், அது அவர்களைப் பயமுறுத்துகிறது.

அதனால், அவர்கள் தங்கள் தீவினைகளின் இடை யிலேயே இருக்கிறார்கள்.

அப்படி இருந்தவாறு, அவர்கள்

சகோதுமை விதைத்தோம், வெறும் வைக்கோலையே அறுவண்டை செய்துள்ளோம்;