பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.2 வெற்றிமேல் வெற்றி பெற.

உழைப்பெடுத்து உழுதோம், ஆனால் அந்த முயற்சிக்கு ஏற்ப பயன் எமக்குக் கிடைக்கவில்லை;

அதனால், அந்தோ! கொடும் வறுமையினால் அல்லல் பட்டுள்ளோம்.

அதிக அளவில் தான்ியங்களைச் சேமித்து வைத்தோம்;

ஆனால் எலிகள் அவற்றை மிக விரைவாகவே ஒழித்து விட்டன;

பெருந்தொகையான பழங்களை வைத்திருந்தோம், அவை அழுகிப் பாழாகி விட்டன, நீண்ட மாரிக்காலம் வர உள்ளது;

அழிந்து போகவேண்டியவர்கள் தாங்கள், என்றாலும்;

பண்டி மாற்றம் செய்து பெருகதொகையன பணத்தைச் சேகரித்தோம், ஆனால், கொஞ்சம் கள்வரினால் களவாடப் பட்டது, எஞ்சியவை அச்சுகளாக்கப்பட்டன.

உணவான கோதுமையே இல்லாத நிலையில் எதனை நாங்கள் வாங்க முடியும்?

அப்பமும் இல்லை, அப்பம் விற்பவர்களும் இல்லை;

நாங்கள் சாகிறோம்; எங்களைக் காப்பாற்ற யாரு மில்லை’ எனக் கதறுகின்றனர்.

திரும்பவும், அவர்களின் கசப்பான நிலையிலிருந்து அவர்கள் கூறுவார்கள்

நோம் அதிக அளவில் பாடுபட்டோம், ஆனால் அதற்கான பலன் எமக்குக் கிடைக்கவில்லை;

நாம் கட்டி எழுப்பியவை பாழாக்கப்பட்டுள்ளன.

நாம் பாதுகாத்து உறுதியாக்கியவை வலுவற்று விட்டன.