பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 9

விரட்டியடிக்கப்பட்ட பொய்த் தோற்றங்களாகவே கனவுகள் நினைக்கப் படுகின்றன.

விழித்தெழாதவன் விழித்தெழுவது பற்றியோ, கனவு பற்றியோ அறியான். -

அவன் குழப்பத்தில் இருக்கின்றான், அதனால் தன்னையே அவன் அறியான்.

மற்றவர்களையும் அறியான். அதனால், அவனின் தீர்வு அறிவற்றது, முறையற்றது.

விழித்தெழுந்தவன், விழிப்பைப் பற்றியும் கனவு காண்பது பற்றியும் அறிகின்றான்.

அறிவில் நன்கு தேர்ச்சி அடைந்து தன்னை அதில் நிலைப்படுத்திக் கொள்கின்றான்.

தன்னைத் தான்ே அறிந்து கொள்வதனால், அவன் மற்றவர்களையும் அறிந்து கொள்கின்றான்; அதனால், அறிவாறறலுடன் பொறாமையாகவே தீர்ப்பை வழங்கு கிறான்.

அவனே எதையும் புரிந்துகொள்பவன், நெஞ்சங்களை அறிபவன்.

உண்மையின் வெளிச்சத்தில் நடந்து செல்பவனுக்குத் தெரிந்து விடுகிறது, கனவு காணும் ஒவ்வொருவனும் கடைசியில் விழித்துக் கொள்வான் என்று.

3

அறியாமை எனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து நம்மை யெல்லாம் விழித்திருக்க வைப்பது உண்மை.

தீவினையில் மூழ்கி மிக ஆழமான துயரத்தில் கிடப்ப வர்களை உண்மை அழைக்கிறது. அப்போது யார் அந்த அழைப்பிற்குச் செவி சாய்த்து விழித்தெழுகின்றனரோ,