பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 117

வெளிச்சத்தின் பகைவர்கள் எல்லோரையும் அவன் எதிர் கொள்வான்;

பெருமைமிக்க அந்த நிழலுக்குக் கல்லை வீசித் தாக்கு பவர்களை அவன் துரத்தி ஒழிப்பான்,

அளறி (நரகத்தி)ன் திறப்பு (சாவி)களை வைத்தி ருக்கும் வலம்மிக்க காவலர்களைத் தோற்கடித்து விரட்டுவான்.

துன்பப் படல் என்னும் தீயினூடாகச் செல்லும்போது அத் தீயினால் அவன் பொசுங்க மாட்டான்;

மனத்துயர் என்னும் இருள்மிக்க பேராழியைக் கடக்கும் போது, அது அவனை விழுங்கிவிடாது;

குறிக்கோள் என்னும் பெருமை வாய்ந்த காட்டினை வந்து அடைந்ததும் அவன் திரும்பவே மாட்டான்.

அவனைப் பற்றியிருந்த எல்லாவித இருள்களிலிருந்தும் அவன் வெளி வருவான்; f அப்போது, நிழல் அற்ற ஒளியைக் காண்பான். அந்த வலிமைமிக்க இருளின் வெகு தொலைவில் உள்ள விளிம்பில் அவனால் ஒரு குரலைக் கேட்க முடியும்.

அதுவே, புனிதமான ஒருவரின் குரல். அப்பொழுதுஉண்மைக்கு அரசர் அண்மையில் உள்ளார் என்வி தையும்;

முடிசூட்டப்பட்ட நட்பமைதி இளவரசர் அங்கே வருவ தையும் காண்பான்.

அந்தக் குரல் மென்மையாகவும் உண்மையாகவும் இருப்பதனால், அதனையே அவன் பின் தொடர்வான்,

அது அவனை, ஒளியின் நிலையான இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லும்,

வெ-8