பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வெற்றி மேல் வெற்றி பெற...

அங்கே ஒவ்வொரு திரையும் விலக்கப்பட்டு ஒவ்வொரு புதிரான கமுக்கம் விளங்கப்பட்டுத் தீர்த்து வைக்கப்படும்.

அப்போது உண்மைக்குத் தலைவனாக உள்ளவரின் மேன்மையை அறிந்து உணர்வான்;

நேர்மையின் பொது அறமுறைக் கட்டளையின் அழகைக் காண்பான்;

பெருமைமிக்க மெய்மையின் புகழை உற்று நோக்கிக் காண்பான்;

அருளுக்கு ஆட்பட்டவர்களின் பாடலைக் கேட்பான்; தீர்வு பெற்றவர்களின் இனிமையான பாடல்பாவம் ஒழிக்கப்பட்டது, பொது அறமுறைக் கட்டளை எவ்வளவு குற்றம் குறை: யில்லா நிறைவானது!

துயரம் தொலைந்தது; எவ்வளவு மேன்மை மிக்கது அன்பு! துன்புறுத்தும் முகில்கள் கலைந்து ஒழிந்தன. எவ்வளவு பெரும் சிறப்பானது அந்தப் பேரொளி! தவறுகள் வீழ்ச்சியுற்றன, எவ்வளவு மாசிலாப் பெருமை வாய்ந்தது உண்மைl உறங்குபவர்களே, விழித்தெழுங்கள்! வீழ்ச்சி அடைபவர்களே, மேலே பாருங்கள்! அந்த ஒளியில் களி கூருங்கள்! மேன்மைமிக்கவர்கள் வந்து பருகட்டும்; பசித்தவர்கள் வந்து உண்ணட்டும்; இறப்பின் பிடியில் உள்ளவர்கள் வந்து யிர் வாழட்டும்;

விடுதலை இன்பம் நிறைகிறது, மீட்சி உறுதியானது.