பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 119

அமைதியின் வாயிலில் புகுபவனுக்கு இவ் உலகப் பேரரசுகளெல்லாம் துளசாகவே இருக்கும்;

அவற்றின் புகழ், கலைந்துபோகும் முகிலைப் போன்றி ருக்கும்;

அவற்றினால் ஏற்படும் இன் பங்கள் துாற்றப்படும் உமியைப் போன்றவைத்

அவனுக்கு அந்தப் புனிதமானவரின் குரல் கேட்கும்:*தன்னலத்தை வெற்றி கொண்டவனே தீவினையும் துயரத்தையும் வெட்டி வீழ்த்தியவனே,

நிழல்களையும் பொய்த் தோற்றங்களையும் கலைய வைத்தவனே,

தேடுதல் வாளை வீசி விடு,

கூறுபடுத்தும் வாளை உறையில் போடு;

இங்கே துயரங்கள் இல்லை-வேதனையும் இருளும் இல்லை;

முரண்பாடும் பாகுபாடும் இங்கே நுழையக் கூடாது.

நேர்மையைப் பணிவுடன் கடைப்பிடிக்கும் நீ எனது நீதிமுறைக் கட்டளையைக் கண்டு கொண்டாய்.

உண்மையை அமைதியாகத் தேடுபவனான நீ எனது இன்னமைதியைக் கண்டு கொண்டாய்,

அன்புறவையும் நல்லதையும் விரும்பும் நீ என்னைக் கண்டு கொண்டாய்;

உனது வீட்டை எனது நிலையான இருப்பிடத்திற்கு மாற்றிவிடு,

உனது போராட்டம் முடிவுற்றது, நீ ஆறுதல் பெற்று விட்டாய்.