பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வெற்றி மேல் வெற்றி பெற.

எவனால் வெற்றி பெற முடியுமோ, அவன் வந்து உள்ளே நுழையட்டும்.

இருள் கலைந்து ஒழிந்தது; தீமையின் ஆற்றல் அழிந்தது; விதியின் சகடம் தகர்க்கப்பட்டது; அழியாப் புகழுடன் ஒளி நிலை கொள்கிறது; நன்மையின் ஆற்றல் மிக்க உயர்வானது; நேர்மையும், அன்பும், பிணைக்கப்பட்ட ஒவ்வொரு கட்டையும் உடைத்து விடுகின்றன.

இறப்பு வெட்டி வீழ்த்தப்பட்டது, வாழ்வு அறியப் ولت ساسالسا

அழியாமை அறிந்து உணரப்பட்டதால், ஐயம் இனி மேல் இடம் பெறாது;

குற்றமற்றதும் முழுமையானதுமான அன்பு வெளிப் படுவதனால் அச்சம் தூக்கி எறியப்படுகிறது

உண்மைக்கு அரசர் அண்மையில் உள்ளார்; அவரே, தவறற்ற நிறைவுற்ற அறிவு: வாழ்க்கையின் தலைவர் கைக்கு எட்டியுள்ளார், அவரே நிறைவான தூய்மை;

அந்த மீட்பர் இங்கே இருக்கிறார், அவரே குற்றமில்லா நிறைவான அன்பு;

அதனால் அமைதி நிலைகொண்டுள்ளது உறுதியுடன்ஆம்! அதுவே என்றென்றும் நிலைத்திருப்பது. நேர்மையானவர்க்கே இவையெல்லாம் அறிய வைக்கப் படுகின்றன;

அவற்றின் புகழ், அறிவுள்ளவர்க்கே வெளிப்படுத்தப் படுகிறது,