பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேத்தன் 127

பெருந்தன்மையுடன் உனது நெஞ்சத்தை மிகக் கடின மானதாகவும் பிடிவாதம் உள்ளதாகவும் ஆக்குதல்

இவை உனது உள்ளுயிரில் கறையை உண்டாக்கி அமைதியிலிருந்து எங்கோ இழுத்துச் சென்று விடும்.

தூய்மைக்கான வழி எவ்வளவு பெரும் புகழுடையது என்பதை நன்கு கவனித்துப் பார்;

உண்மை எனும் கருவூலம் எவ்வளவு வனப்பு நிறைந்தது!

புனிதத் தன்மை எனும் ஆடை எவ்வளவு அழகானது மகிழ்ச்சியை அளிப்பது!

பகை, இச்சை, தீய எண்ணம்-இவற்றிலிருந்து விடுதலை பெறுவது எவ்வளவு இனிமை, எவ்வளவு மகிழ்ச்சி!

இன்பங்களுக்கும் வெகுமதிகளுக்கும் ஆசையற்று இருப்பது எவ்வளவு நன்மை, எவ்வளவு களிப்பு!

மற்றவர்களிடம் உள்ள தீமைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது எவ்வளவு சிறப்பானது, மகிழ்ச்சிகரமானது!

நான் எனும் தற்பெருமையை அடியோடு அகற்று; விளைவு எவ்வளவு சிறப்பு: எத்தகைய அமைதி:

தூய்மையான உள்ளத்தினால் உண்டாகும் பேரின்பம் எண்ணிப் பார்ப்பதற்கே அப்பாற்பட்டது;

தீமையில்லாத மனத்தின வனப்பு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாத அளவிலானது;

என்றும் நிலைத்திருக்கும் நேர்மையே மேன்மை மிக்க பே ரின் பம்!

நட்பமைதியை ஏற்படுத்துவதே உயர்வான தூய்மைச் கறைபடியா வாழ்க்கையே களிப்பை உண்டாக்கும். தீமை இல்லாத நெஞ்சயமே சீரறிவு மிக்கது,