பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 11

சரியானதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றியமை பாதது.

தீவினையற்ற மனம்தான்் தெளிவான மனம்.

சரியாகப் பகுத்தறியும் ஆற்றல் எவனிடம் உள்ளதோ, அவனே களங்கமற்ற தன் செயல் வெளிச்சத்தினால் புனிதமான அறவுறகளையும் கட்டளைகளையும் சரியாகவே வெளிப்படுத்துவான்.

தவறுகளைத் திரும்பவும் அவன் புரிவதில்லை, ஆனால் உண்மையின் உட்பொருளைப் புரிந்து கொள் கின்றான்-அதுவே உண்மையின் ஆற்றல் எழுச்சி.

தீவினைகளிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் நல்ல செயல்கள் செய்வதையே உறுதியாக்கி, எல்லோ ருடனும் இணக்கத்துடன் வாழ வேண்டும்.

எவர்கள் தீங்கு இழைக்கிறார்களோ அவர்கள் உண் மையை அறியாதவர்கள்.

உண்மை அவர்களிடமிருந்து நன்மை புரிகிறது.

இரவில் இருளைப் போக்கி ஒளிதரும் விண்மீன்களைப் போல் உண்மையின் செயல்கள் ஒளிரும்.

என்றும் நிலைத்திருக்கும் நல்லதை வெளிப்படுத்து கிறது உண்மை.

இரவைப் பகலாகவும், எல்லாவற்றின் தோற்றங் களையும் மாற்றுவது உண்மையே; அதனால் தீவினையும் துயரமும் நீங்கித் தீமை என்றுமே நிகழாமல் போய் விடுகிறது.