பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் {8?

தன்னலத்தினால் ஏற்படும் சோர்வு எவ்வளவு சுமை யானது!

ஆனால், நேர்மையைக் கடைப்பிடிப்பது பயனுள்ளது. உண்மையில் எழும் அமைதி இனிமையானது. அன்பு உள்ளவர்களிடம் எல்லாமே உள்ளன. அன்பில் குடியிருக்கிறான் இறைவன், அன்பில் பெருமைமிக்க மெய்ம்மை வாழ்கிறது; வியப்புக்குரிய அமைதி அன்பில் மட்டுமே காணப்படு கிறது.

மிக்க உயர்வான தூய்மை அங்கே உள்ளது, அத்துட்ன் மேன்மை மிக்க பணிவும்கூட. எவன் தனது உள்ளத்தை அன்பிற்கு இணங்க வைக்கி றானோ, அவனே நிறைவானவன்.

தன்னலத்தில் நாட்டம் கொண் டால், உன்னிடமிருந்து அன்பு பிரித்து எடுக்கப்படும்.

அன்பை நாடு, ஆம்,அது உன்னிடத்திலேயே உள்ளது! அறிவொளியை யார் தேடுகிறார்களோ? உண்மையை யார் நாடுகிறார்களோ? அன்பை யார் வேண்டி நிற்கிறார்களோ? அவர்கள் வந்து சொல்லட்டும்

தூய்மைக்கான கதவுகள் திறக்கப்படும்! பணிவுக்கான உனது குறுகியநுழைவாயிலை இனிமேல் மூடி வைக்க வேண்டா!

என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பின் கதவுகளை விரிவாகவே திறந்துவிடுங்கள்?’ என்று

அகத்தும் புறத்தும் அவரின் குரல் கேட்கப்படும். அவன் வீணாகவே புலம்பி அழவோ வழியை இழக் கவோ மாட்டான். -