பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 148

அதனால், பணிவு எனும் உடையை நீயாகவே அணிந்து கொள்;

உன் தவறுகளையும் உன் ஆழமான தீவினைகளையும் கூட ஏற்றுக்கொள்.

அவ்வாறு, தவறுகளை நீயே ஏற்றுக் கொள்வதனால், அன்பின் வழியை நீ கண்டு கொள்வாய்.

அப்படி அன்பைக் கண்டு கொண்டதும், ஆசானையும் கண்டு கொள்வாய்.

அதன்பின் நீ ஆறுதல் அடைவாய். தன்னலத்தை நீயாகவே மறுத்துவிடு. உன்னையே கட்டுப்படுத்திக் கொள்; உன்னை நீயே வெற்றி கொள்; நல்லெண்ணம் உன்னைவிட்டு அகலாவண்ணம் பார்த்துக்கொள்.

எல்லோருடனும் நட்புறவாக இரு. ஆம் விலங்கு களுடனும் கூட.

அப்பொழுதுதான்் மிக உயர்ந்த உண்மை உன்னுள் வந்து அமர்ந்து கொள்ளும்; ...

உனக்கு ஆசானின் உள்ளம் வெளிப்படுத்தப்படும்; துயரமும் துன்பப்படுதலும், அச்சமும் ஐயமும் உன்னை விட்டு வெகுதொலைவு சென்றுவிடும்,

அப்போது அழிவில்லாத தன்மை வாய்ந்த அறிவு அமைதியுடன் உனது நெஞ்சத்தில் நிரம்பும்.

அவ்வாறாகவே, ஆசானின் உள்ளம் அறிமுகப் படுத்தப்படுகிறது.

அவரை ஏற்பதற்கு உறுதியுடன் அணியமாக இருப்வ வர்களுக்கு அவர் வெளிப்படுகிறார்.