பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 158

உங்களின் எல்லா நிழல் தோற்றங்களையும் கலைத்து விடுங்கள், -

உங்களின் எல்லாப் பொய்த் தோற்றங்களையும் அழித்து விடுங்கள்,

அடபோது, நீங்கள் அந்தப் பெருமை மிக்க மெய்ப் பொருளில் புகழலாம்;

அமைதியான நிறைவுடன் என்றும் நிலைத்திருக்கும் இணக்கம் உள்ள ஒத்திசைவில் இணைந்து விடலாம்;

பேரின்ப நிறைவுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் பாடலைப் பாடலாம்; r

விண்ணையும் மண்ணையும் அதிர்ச்சி பெற வைக்கும் அந்தப் பாடல்.

உங்களதும் எனதுமான அந்தப் பாடலை நீங்கள் பாடுங்கள்

பரிவிரக்க ஆசானுடன் அறிமுகம் செய்துகொண்டேன்; நிறைவான அறக் கட்டளை யெனும் ஆடையை

அணிந்து கொண்டேன்;

பெருமை மிக்க மெய்ப்பொருளின் பேரசில் புகுந்து விட்டேன்.

ஆறுதல் அளிக்கப்பட்டது, அதனால் தேடி அலைவது முடிவுற்றது;

அமைதி இவற்றுள் ஏற்பட்டதனால், துயரும் நோக் காடும் ஒழிந்து விட்டன;

ஒற்றுமை தெளிவாக்கப்பட்டதனால், குழப்பம் கரைந்து விட்டது;