பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தின் 155

ஆகவே, உண்மையைப் பற்றி நான் உரை நிகழ்த் தவோ கற்பிக்கவோ தேவையில்லை;

அங்குச் செல்வதற்கான வழிபற்றி சொல்கிறேன்: ஏனெனில், உண்மை என்பது சொற்களினால் ஆன தில்லை, வாழ்க்கையினால் ஆனது;

உண்பையே நாவை ஆட்சி புரிகின்ற போதிலும், அது அங்கே இருப்புக் கொள்வதில்லை, அதன் இருக்கை நெஞ்சத்திலே உள்ளது.

மொழிகளால் விளக்க முடியாததற்கு எந்தச் சொற்கள் அதன் அழகை மிகுக்கும்?

மேலும், உண்மைக்கு மாந்தரால் என்ன புகழை அளிக்க முடியும்?

சொற்களால் விளக்க முடியாதது, சோற்களுக்கு அழகைக் கொடுக்கட்டும்;

ஆகவே, உண்மையினால் மாந்தன் புகழ்ச்சியைப் பெறட்டும்,

ஆகவே, உண்மைக்குச் சென்றடையும் வழியை நான் கட்டிக் காட்டுகின்றேன்.

ஊக்கத்தினால் அந்த வழியை நான் காட்டவில்லை, ஆனால் பயிற்சியினாலும் அதனை முழுமையாகப் பெற்றதனாலுமே அதற்கான வழியைக் காட்டுகிறேன்.

அந்த வழியே தன்னை வெற்றி கெர்ள்ளல் என அழைக்கப்படுகிறது.

நம்புகிறவர்களுக்காகவே நான் எழுதுகின்றேன்,

ஏனெனில், அண்ர்களே தன்ன்ம்ை வேற்றி கொள்ளப் படும் என்பதை நம்புகிறவர்கள்.