பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் .18

நாம் கட்டுண்டு துயரத்திற்குள்ளாகின்றோம்; அதற்கு ஏற்ற வகையில் மட்டும் உள்ள கனவுகளைக் கண்டோம்;

நாம் கடந்து சென்ற பாதையோ சென்ற இடமோ நமக்குத் தெரியாது.

எவன் மாந்தனை தீமையென வெறுக்கிறானோ அவன் தீவினைக்கு உள்ளாகிறான்.

தீவினைக்குள் இருக்கும் அவன் விழித்து எழுவ தில்லை

விழித்திருப்பவனே எல்லா மனிதர்களையும் விரும்பு பவன், அவனிடிம் வெறுப்பில்லை.

அவனை வெறுப்பவர்கள் மேல் அன்பு வைத்திருப்பதே, உண்மையில் அவன் விழித்துக் கொண்டுள்ளான் என்ப தற்கு அடையாளம்.

தீய கனவுகளுக்கு உண்மை முற்றுப் புள்ளியிடுகிறது; அது வெறுப்பின் பொய்யான தோற்றங்களைக் கலைக்கிறது;

இருளிலிருந்தும் கனவுகளிலிருந்தும் தூங்குபவரை விடுவிப்பதும் அதுவே.

விழித்துக் கொள்ளுங்கள், ஆம்! அந்த உறக்கம் தவறானது!

நீங்களாகவே விழித்துக் கொள்ளுங்கள்! தீவினை தான்் அந்தக் கனவு!

உயர்வான வாழ்வின் சிறப்பு உங்களைச் சுற்றியே உள்ளது, நல்லவரின் வாழ்வும்கூட.

கண்களைத் திறந்து பாருங்கள். எச்சரிக்கையுடன் இருந்து காதைக் கொடுத்துக் கேளுங்கள், உண்மையின் அழைப்பை உங்களால் கேட்க முடியும்.

விழித்தெழவைக்கும் பெருமை வாய்ந்த குரலைக்கூடக் கேட்கலாம். -