பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வெற்றி மேல் வெற்றி பெற...

கறைபடியாத அந்த ஒன்றை அவனால் காண முடியும்

தனக்குள்ளே உள்ள மூலகாரணத்தைத் தேடும்போது, தீவிர உணர்வுகள் அவனுக்கு நோக்காடு தராது.

அந்த உணர்வுகளுக்கான மூல காரணத்தைக் கண்டு அதனை அழித்து விடுவான்,

தன்னைக் கட்டுப்படுத்தல், மனத்திற்கும் நெஞ்சத் திற்கும் அமைதியளிக்கும்.

அப்போது, நட்பமைதி வழியில் வெகு தொலைவு பயணம் செய்வான்,

இரண்டாவது தங்குமிடத்தைச் சென்றடையும்போது நிறைவான மகிழ்ச்சியையும் புனிதத் தன்மையையும் அவன் சுவைத்துணர்வான்.

இருந்தும், அங்கேயே தங்கியிருப்பதனால், அதி உயர்வானதைச் சென்றடைய முடியாது.

தன்னிடம் தான்ே புகல் அடைதல்

தன்னைத் தான்ே நன்கு அடக்கிக்கொண்டு, தன்னைத் தான்ே ஆழமாக ஆய்வுசெய்து,

அன்பை விரும்புபவன், இப்போது தன்னைப் புகழடைய வைக்கும் பயிற்சியில் ஈடுபடட்டும்.

தன்னடக்கத்தைப் பயிற்சிசெய்பவன், நல்ல முறையில் பயணம் செய்கின்றான்;

தன்னை அடக்கிக் கொள்பவனாலேயே உயர்வு மிக்கதைக் காண முடியும்.

எவன் தன் அடி உள்ளத்தைத் துறக்கிறானோ,