பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வெற்றி மேல் வெற்றி பெற.

பேரவாவின் தீச்சுடர்கள் அவனைச் சுட்டெரிக்கா; ஏனெனில் அவற்றின் வேட்கையை அவன் தீர்த் துள்ளான்.

தீய கவர்ச்சிக்கான காரணத்தை அவன் அழித்துவிட்ட தனால் அக் கவர்ச்சி அவனைச் சவுக்கடிக்கு ஆளாக்க முடியாது;

உண்மையில் அவன் முழுமை பெற்றுவிட்டதனால் தன்னடக்கம் இனிமேல் தேவைப்படாது.

தன்னலத்தினின்று விடுபட்டவன், துக்கத்திலிருந்து விடுபடுவான்.

தவறுகளிலிருந்து விடுபட்டவன், இனிமேல் துயரப்பட மாட்டான்.

தூய்மை இன்மையிலிருந்து விடுபட்டவன், நோக்காட் டிலிருந்து விடுபடுவான்.

உயர்வுமிக்க மகிழ்ச்சியில் சேர்ந்து கொள்வான்.

மேலும், இறுதித் தங்கும் இடத்தை அடைந்ததும் நிறைவான பேரின் பத்திலும் பங்கு கொள்கின்றான்.

அழியக் கூடியவற்றிற்கு மதிப்பு அளிக்காதவனை ஒருபோதும் திருட முடியாது.

தன்னை விரும்பாதவன் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டான்.

அவனை மனிதர்கள் கொலை செய்யத் திட்டமிட்டா லும், அவன் ஒருபோதும் அழியான்.

ஏனெனில் அவன் இனிமேல் தன்னலமற்றவன், அவன் உண்மையாகின்றான்.