பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 189

உண்மையை யாரால் அழிக்க முடியும்?

எல்லா உடல்களும் இறப்பினால் அழிகின்றன, அதனால் உண்மை இறப்பதில்லை, அழிவதில்லை.

எல்லாமே மறைந்து போகின்றன. ஆனால் உண்மை என்றென்றும் நிலைக்கிறது.

எவன் தன்னலத்தைப் புகலடைய வைக்கின்றானோ அவன் அழிவற்ற நிலையைப் பெறுகின்றான்.

இனிமேல், அவன் வேறுபடுதில்லை, ஆனால் உண்மை யுடன் ஒன்றாகி விடுகிறான்.

மாந்தர்கள் இதனைத் தெரிந்து கொள்ளாத போதிலும் அவன் அந்த உயர்வு மிக்கதை தெளிவாகவே கண்டு கொள்கிறான்.

தன்னல அடக்கத்திலிருந்து பிறக்கிறது பண்பு, தன்னையே ஆய்வதனால் அதிகமாகிறது அறிவு,

தன்னைப் புகலடைய வைப்பதிலிருந்து மலர்கிறது அன்பு.

தன்னைத்தான்ே அடக்கிக் கொள்பவன் மகிழ்ச்சி பெறுகின்றான்.

தன்னைத் தூய்மைப்படுத்துபவன் புனிதனாகின்றான்.

தன்னைத்தான்ே புகலடையச் செய்பவன் தெய்வீக மாகின்றான்.

ஒருவனின் வாழ்வு பண்பினால் ஆட்சி செய்யப்படு கிறது.

ஒருவனின் வாழ்வு, அறிவினால் தூய்மையாக்கப்படு கிறது.

வெ-11