பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 37

உண்மையே மாண்புமிக்க நட்பமைதி: தவற்றின் கண்களைக் கொண்டு பார்ப்பவன், கொடும் புயல் காற்றைப்போல் அமைதி அற்றவனாகிறான்.

ஆனால், உண்மையின் கண்களால் பார்ப்பவன் அசை யாத மலைபோன்ற ஆறுதலை அடைகின்றான்.

நாம் உலகுடன் நட்புறவு செய்யப்பட்டுளளோம்; மனிதத் தன்மையுடன் நட்புறவு செய்து வைக்கப்படு கின்றோம்;

அப்படி நட்புறவு செய்யப்பட்டதும் நாம் ஆறுதல் அடைகின்றோம்.

எங்கே ஆறுதலின்மை உள்ளதோ, அங்கேநட்புறவுக்கு இடமே இல்லை;

எவர், அப்படி செய்யப்படாமல் இருக்கிறார்களோ அவர்கள் உண்மையைப் பெறாதவர்களாகிறார்கள்.

2

உலகிலுள்ள அனைத்துமே சரிசம அளவில் அமைந் துள்ளன!

எல்லாச் சூழ்நிலைகளும் முறையானவை;

எல்லா நிகழ்வுகளும் காரணங்களுடனே நிகழ்கின்றன.

எவனுக்கு உண்மையின் ஒளி கிடைக்கிறதோ அவன் அல்லாவற்றையும், அவற்றின் சரியான தொடர்புகளுடன் காண்கின்றான்.

எல்லாமே காரணத்தின் அடிப்படையில் நிகழ்கின்றன; அதனால் ஆட்சி கொள்ளப்படுகின்றன;

6Nou- 8