பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 41

நண்பர்கள் அண்மையிலோ பகைவர்கள் தொலை விலோ இல்லை;

புகழ்ச்சியும் குற்றச்சாட்டுகளும் வெவ்வேறாக இல்லை உண்மை எல்லாவற்றையும் ஒன்று கூட்டுகிறது. அது, எல்லா எதிரிகளையும் ஒன்றாக்குகிறது.

ஆம்! கூறுபட்டிருந்த ஆற்றல்கள் இப்போது ஒன்றாகச் சேர்ந்துள்ளன.

போட்டியிட்டுக் கொண்டிருந்தவை அனைத்தும் இப் போது இணக்கத்தில் உள்ளன.

எதிராகக் காணப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்போது இணக்கமாகவே உள்ளன.

நாம் அச்சப்பட்டது எவ்வளவு மடமை?

எங்கள் மூட வெறிமையில் எவ்வளவு குருட்டுத்தனமாக இருந்தோம்!

நமது நெஞ்சத்தில் எவ்வளவு வெறுப்பு ஊட்டப் பட்டது! -

சிறிக் கொல்லும் விலங்குகளைப் போலிருந்தோம்.

அல்லது, குருட்டு விட்டில் பூச்சி அடிபட்டு இறப்பதைப் போல்!

எல்லாமே ஒத்திருக்கின்றன.

அதனால் அச்சம், அறியாமை, வெறுப்பு-இவற்றிற்கு இனி இடமே இல்லை.

மிகக் குறைவான நிலையிலிருந்து விடுபட்டு மிகப் பெருமை வாய்ந்த உயர்நிலை வெளிப்படுத்தப்படுகிறது.

பகுதியை ஒதுக்கித் தள்ளிவிட்டு முழுமையே பெறப் به سقتافه

இறைவில்லாததைத் தவிர்க்கும்போது, மிஞ்சியிருப்பது முழுமையோ