பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 43

சற்று நேரத்திற்கு மட்டும் வருவார்கள், அப்படியே சற்று நேரத்தில் போய் விடுகின்றனர்.

எவ்வளவு அவாவுடையவர்கள்! எவ்வளவு பற்றார்வம் உடையவர்கள்! எவ்வளவு கொடியவர்கள்! உலக ஆதாயங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தது அமைதிக்கான உந்துதலே.

ஆட்சியையும் செல்வங்களையும்விட உண்மையுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதே மேன்மை மிக்கது.

தீத்தழல் அவிந்து போகிறது, புயல் அமைதி அடை கிறது;

ஆனால் இன்னமைதி மிஞ்சிவிடுகிறது. அமைதி பக்குவமாகப் பாதுகாத்து மீண்டும் நிலை பெறச் செய்கிறது. -

வீறமைதியே மிகப் பெருமை வாய்ந்த உடமை. நமது தனித்த நிலையை யார் பழிப்பது? அமைதி, ஆற்றல் மிக்கவனைத் தழுவிக்கொள்கிறது. நமது நட்புறவு அவனையும் இணைக்கிறது. இடைவெளி இருந்தும் நாம் வேறானவர்களல்லர். தனித்திருந்தாலும், நாம் பிரிக்கப்பட்டவர்கள் அல்லர். எவருடனும் தொடர்பு இல்லாமலும் எவருடனும சேர்த் திருக்காமலும் உள்ளோம்.

இருந்தும்கூட, எல்லோருக்கும் நாம் உரியவர்களே. ஏனெனில் முழுமைபெற்ற நட்புறவு பாகுபாடு அற்றது,

முறையானது.

எவன் எல்லாத் திசைகளையும் பார்க்கிறானோ

அவனே முழுமையைக் காண்கிறான்;