பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை-எங்கள் பாதுகாவலன்

l

நற்செயல்கள் எல்லாமே உண்மையானவை. நாம் செய்யும் நற்செயல்கள் நம்முடனேயே தங்கி நிற். கின்றன, அவை நம்மைப் பாதுகாத்து ஆதரிக்கின்றன.

தீச்செயல்கள் தவறானவை. திச்செயல்கள் நம்மைப் பின் தொடர்கின்றன, தீச் செயல்களைச் செய்யத் தூண்டப்படும் வேளை, அவை எங்களைத் துாக்கி எறிகின்றன.

தீச்செயல் புரிபவர்கள், கவலையிலிருந்து காத்துக் கொள்ளப்படுவதில்லை;

ஆனால் நன்மை புரிபவனோ, எல்லாக் கெடுதல்களிலி ருந்தும் காப்பாற்றப்படுகின்றான்.

மூடன் தனது தீய செயலிடம், வெளியில் தெரியாத வாறு மறைவாகத் தங்கிவிடு’ எனக் கூறுகிறான்.

ஆனால், அவனின் தீமை முன்னரே எங்கும் தெரிந்து விட்டது,

அதனால் அவனுக்குத் துயரம் உறுதியானது. நாம் தீமையில் உள்ளோமானால், நம்மை எதுதான்் காப்பாற்ற உள்ளதோ?

துன்பத்திலிருந்தும் குழப்பத்திலிருந்தும் நம்மை விடு விப்பது யாது?

மனிதனோ, மங்கையோ, செல்வமோ, அதிகாரமோ, விண் உலகமோ, மண்ணுலகோ-எதுவுமே குழப்பத்தில் இருந்து நம்மை விடுவிக்காது.