பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 49

தவற்றிலிருந்து உண்மையோ, உண்மையிலிருந்து தவறோ தொடர முடியாது.

தீமையின் விளைவு நன்மையாகவோ நன்மையின் விளைவு தீமையாகவோ இருக்க முடியாது.

அதற்குச் சிறிதளவும் விளக்கம் தேவையில்லை. ஆனால், நேர்மையானவர்கள் விளங்கிக் கொள்கின் றனர், விளங்கிக் கொள்ளும்போது மகிழ்ச்சி அடை கின்றனர்.

உண்மையின் நெறிமுறைக் கட்டளையினால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்:

உணரக்கூடிய மனத்தைப் பொய்யான தோற்றங் களால் ஏமாறற முடியாது;

எல்லாத தோறறங்களுக்கு முன்னும், அது நன்மையில் மகிழ்ச்சி அடைகிறது.

நிகழ்வுகள் தாக்கும்போது, நன்மைத் தவறி விட்டது; என அது நினைத்துக் கொள்வதில்லை;

வெளியே உள்ளவை தோல்வியுறும்போது, நேர்மை யானவர்கள் என்னை ஆதரிக்கவில்லை’ என்று துன்பம் நேரும்போது அது வருந்துவதில்லை;

ைஉண்மையே! என்னைப் பாதுகாத்து எனக்கு ஆதரவு அளிக்கவில்லை’ என்று கூற முடியாது.

உண்மை, எண்ணத்திலே உள்ளது, பொருளில் இல்லை!

அது நெஞ்சங்களிலே குடியிருக்கிறது, வெளியில் காணப்படும் பழக்கத்தில் இல்லை!

அது, உள்ளே உள்ள பகைவர்களை அழிக்கிறது, வெளியே உள்ள இடர்களுக்கு அதன் பின்னர் ஆற்றல் இல்லாது போகிறது.