பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வெற்றி மேல் வெற்றி பெற...

மிக்க வேதனையாலும் மனக்குழப்பத்தினாலும் தீய செயல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன;

நற்செயல்களோ பெருமகிழ்ச்சியிலும் அறிவாற்றலிலும் தன்கு நிலை நிறுத்தப்படுகிறது.

நம்பியவரை ஏமாற்றாத நண்பனே, உண்மை; என்றும் கைவிட்டுவிடாத பாதுகாவலன். உலகம் தோல்வியடைகிறது, ஏமாறுகிறது. அது, வாடி வதங்கி, கனவுபோல் மறைந்துவிடுகிறது உண்மை நிலைக்கிறது.

அது மேலும் தெளிவு பெற்று உண்மையான நிலையை ாய்துகிறது.

எவரெவர் உண்மையை அறிந்து உணர்கிறார்களோ அவர்களே நிறைவு அடைந்தவர்கள்.

உண்மையால் பாதுகாத்து மெய்யாக ஒரு பாதுகாவல னைக் கண்டு கொண்டவர்கள்.

பணிவுள்ளவர்கள் செருக்குள்ளவர்களிடமிருந்து காப் பாற்றப்படுகின்றனர்.

தூய்மையானவர்கள் துய்மையற்றவர்களிடமிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

கபடமற்றவர்கள் பேராசைக்காரர்களிடமிருந்து காப் பாற்றப்படுகின்றனர்.

அன்புள்ளவர்கள் வெறுப்பவர்களிடமிருந்து காப்பாற் றப்படுகின்றனர்.

ஒளிவு மறைவின றி செயல்படுவோரின் முன்னிலையி லிருந்து பேரவா விரைவாகவே ஓடிவிடுகிறது.

அமைதியானவர்கள் தங்கியுள்ள இடங்களுக்குள் சண்டை சச்சரவு புகுந்துவிட முடியாது.

அறிவொளியின் அடிச்சுவடுகளில் முட்டாள் அடி வைத்து நடப்பதில்லை.