பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வெற்றி மேல் வெற்றி பெற.

உண்மை ஒப்புயர்வற்றது; உண்மை யாராலும் வெல்ல முடியாதது; உண்மை என்றென்றும் வெற்றிக்களிப்புடையது.

புனித உரையாடல்

ஆசிரியனும் மாணாக்கனும்

வணக்கம்!

உண்மையை நாடும் தீங்கள் அனைவரும் மகிழ் வுறுங்கள்!

உண்மையை வேட்பவர்களே! நீங்கள் அனைவரும் உங்கள் வேலையை ஒழித்துவிட்டு கணி கூருங்கள்!

காலைக் கதிரவனைக் கானும் பனி போல உங்கள் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்;

உங்கள் ஐயங்களெல்லாம் மறைந்து போகும் இருன் போன்றது;

இரவில் நீங்கள் காணும் கனவு போன்றது உங்கள் துயரங்கள்.

மாணவனின் பலத்த குரலை ஆசான் கேட்டு விட்டார்;

மாணவன் அணியமானான், ஆசான் அருகிலேயே இருந்தார்.

மாணவன் ஆவலுடன் கவனித்தான்், ஆசான் விளக்கினார்.