பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 57

வினவு-விடை தருவேன்; தேடு அது உனக்குக் கிடைத்துவிடும்.

மாணவன் எனக்கு ஆறுதலை அளியுங்கள் என் மதிப்புக்கு உரிய ஆசானே! நான் சோர்வடைந்து விட் டேன். என்னைப் பலம் மிக்கவனாக ஆக்குங்கள்;

நான் பலம் இழந்தவனாக நிற்கிறேன்.

அறிவை அளியுங்கள். நான் அறிவில் பின்னடைந் துள்ளேன்.

ஆசான் எவன் தன்னலத்தைவிட்டு என்னிடம் தஞ்சம் புகுகிறானோ, அவன் எக் காலத்திலும் தனித்து விடப்படமாட்டான்;

எனது சொல்லே அவனுக்கு ஆறுதலை அளிக்கும்;

எனது அறமே அவனின் பலம்,

எனது கட்டளைகளே அவனுக்கு அறிவூட்டலும், அறிவும்.

மாணவன்: சொல்லுங்கள், நான் கேட்கின்றேன்;

உங்கள் அறநெறிகளை வெளியிடுங்கள், அதன் வழியே தரன் செல்வேன்;

எனக்குக் கட்டளையிடுங்கள், நான் உங்கள் தொண் டின்; உங்களுக்குப் பணிவேன்; நீண்ட காலமாகத் தேடிக் கொண்டிருந்த ஆசான் நீங்களே என்பதனால் உங்களை இப்வேகத் கண்டு கொண்டேன்; உங்களிடமிருந்து நான் பிரியேன்.

எவன் ஒருவன் தன்னலத்தின் பின்தொடர்கின் றானோ அவனை நான விலக்கிக் கொள்வேன்;