பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 61

உண்மையைத் தேடுவதுடன் உன் உள்ளத்தையும் தேடு, அப்போது தன்னலத்தில் உள்ள எல்லாவற்றையும் அங்கிருந்து தூக்கி வெளியே வீசி விடு.

மாணவன் : தன் ைலத்தினால் ஏற்படுவது என்ன? ஆசான் : பேராசை, தீவிர உணர்ச்சி, நான் எனது என்ற தற்பெருமை.

இவற்றிலிருந்து எழுகின்றது தன்னலம் என்னும் மாயத் தோற்றம்.

அந்த மாயத்தோற்றமே உண்மைக்குத் தடையாக உள்ளது.

பேராசைகளில் இருந்து விடுபட்டுக் கொள். தீவிர உணர்ச்சிகளை வெற்றி கொள். தற் பெருமையைத் தொலைவில் நிறுத்தி வை. அதன் பின்னர் மாயத் தோற்றங்கள் விடுபட்டுப் போவ துடன் எல்லா வகையான உனது ஐயங்களும் மறைந்து

விடும்.

மாணவன் : ஒ ஆசானே! என் முன்னே உங்களால் வைக்கப்பட்டுள்ள பணியோ பெருமைமிக்கது.

நான் செய்ய வேண்டும் என நீங்கள் எனக்குக் கட்டளை இட்டிருப்பதோ மிகவும் கடினமானது,

அவற்றிலிருந்து விடுபடவும் உங்களால் எனக்குச் கட்டிக்காட்டப்பட்டதுமான அந்த வழியோ செங்குத் தான்து; எனக்குப் புதுமையானதாய் இருக்கிறது.

இயற்கையாகத் தோன்றிய ஆசை எனது இயல்பில் ஆழமாகவே வேரூன்றி விட்டது.

வுெறி உணர்ச்சி, உலகியற் பொருள்களுடன் என்னை, இறுகவே இணைத்து விட்டது.