பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 69

தன்னலத்தின் அழிவையும் அதன் நிலையற்ற இன்பங்களையும்,

என்றென்றும் நிலைத்திருக்கும் உண்மையையும், அது அளிக்கும் அமைதியையும்,

அறியாமையின் அறிகுறிகளையும்,அறிவை உண்டாக்கு வதற்கான காரணத்தையும், م

என்றென்றும் நலமே இருப்பது எது என்பதையும், நீ கறறு அறிய வேண்டியுள்ள அல்லல் மிக்க தன்னலத் தையும், உண்மையின் பேரின்பத்தையும்,

அத்துடன் மறைந்துபோகும் மாயத்தோற்றத்தையும், நிரந்தரமான இயற்பொருளையும், அறிந்து உணர வேண்டும்.

உண்மையாக முயற்சியுடன் இருந்தால் உனக்கு இவை எல்லாவற்றையும் கற்றுத் தருவேன்.

மாணவன் : தங்களைவிட்டு என் மனத்தையும் பார் வையையும் வேறு பக்கம் திரும்பவோ தங்களின் தூய்மை யான வழியைவிட்டு விலகவோ மாட்டேன்.

ஆசான் : ஒ அன்பனே! நான் சொல்வதை மீண்டும் கேள்.

கட்டுப்பாடான ஒழுங்குமுறையாலும், தூய்மைப்படுத் தும் வழியில் பற்றுடன் நடந்து செல்வதனாலும்,

இதனை விட்டுவிடாமல் தொடர்ந்தும் இதனுடன் இயைந்து போவதனாலும்,

திருமானாக்கரின் குறைவான மூன்று ஆற்றல்களை முயற்சி செய்து பெற்றிடுவாய்,

அத்துடன், பெருமைமிக்க மூன்று ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வாய்.

8-له 6