பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வெற்றிமேல் வெற்றி பெற...

மேலும், குறைவான, பெருமையான ஆற்றல்கள், வெல்ல முடியாதவை என்பனவற்றை உனக்கு அளிக்கும்.

'அவற்றின் உதவியால்'எல்லாத் தீவினைகளும குறைக். கப்படும்;

மிக விரைவில் நீ வெற்றி அடைவாய். அதனால், உயர்வான இடத்தை அடைவதில் நீ வெற்றி அடைவாய்.

மாணவன் : தேவையான பெருமைமிகு ஆற்றல் யாவை?

ஆசான் : தன்னடக்கம், தன்திற தம்பிக்கை, உற்றுணர்தல் இவையே குறைவான மூன்று ஆற்றல்கள்.

உறுதியுடன் இருப்பது, பொறுமைப் பண்பு-இவையே பெருமை வாய்ந்த ஆற்றல்கள்.

எப்போது உனது மனம் நன்கு கட்டுண்டு இருக் கின்றதோ,

எப்போது நீ வெளியிலிருந்து உதவிகளை நம்பி யிருக்காமல் உண்மையை மட்டுமே நம்பியிருப்பாயோ,

எப்போது எவ்வித விடுபாடுமின்றி உனது எண்ணங் களும் செயல்களும் உன்னால் உற்றுக் கவனிக்கப் படுமோ,

அப்போது அந்தக் குறைவான மூன்று ஆற்றல்களும் உனதாகி விடும்.

இந்த ஆற்றல்களுடன் நீ அந்தப் பெரும் இருளைப் போககிவிடுவாய்;

அரும் பெருமை வாய்ந்த ஒளியை நீ அடைவாய்;

அப்படி அடைந்ததும் உண்மையுடன் மிக விரைவாகவே பிணைக்கப்பட்டு விடுவாய்,