பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 71

எல்லையில்லா அமைதியுடையவனாக நீ ஆகி விடுவாய்.

எதனாலும் மாற்றவோ அழிக்கவோ முடியாதவாறு பண்பாளனாகி விடுவாய்.

அப்போது, அந்த மூன்று ஆற்றல்களும் உனதாகி விடும்.

அதன் பின்னர் ஒழுங்கு, கட்டுப்பாடு என்ற வழியின் முடிவுக்கு வந்துவிடுவாய்.

அறிவெனும் உயர்வான வழியில் முன்னேறிக் கொண்டி ருப்பாய்.

அப்படி அந்த அறிவு வழியில் நடந்து செல்லும்போது, உனது துயரமெல்லாம் மறையும்.

உனது இருளானது என்றும் திரும்பி வராமல் அகன்று விடும்.

மகிழ்ச்சியும் ஒளியும் உனது காலடிகளில் காத் திருக்கும்.

மாணவன் : நான் மட்டும் உறுதி செய்யப்பட்டுள் ளேன்.

ஒ, ஆண்டகையே! தங்களைத் தொடர்வதற்கு நான் வலிமை பெற்றுள்ளேன்.

அறிவு என்னும் வாய்மொழியால் எனக்கு ஆறுதலை அளித்தீர்கள், அதனால் தங்களுக்கு நான் கீழ்ப்படிகின் றேன், தங்களது கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள் கின்றேன்;

உண்மை பற்றிக் கூறி உந்தாற்றல் அளித்து எனக்குத் துணிவை ஊட்டி விட்டீர்கள்.

அறிஆட்டுதலுக்கான வழியைக் கற்பித்தீர்கள்.