பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 78

ஆசான் : துறவு, ஒ அன்பனே! அது இருவகை யானது.

எழுத்துருவிலும் உள்ளது. 'உயிருணர்விலும் உள்ளது.

வெளியில் காணப்படும் பொருள்களையும் தனிப்பட்ட சில செய்கைகளையும் துறப்பது எழுத்துருவிலான பொய்

யான துற வு.

மனத்தே உள்ள ஆசைகளையும் தூய்மைக் கேடுகனை யும் துறத்தலே மெய்ப்பொருளில் உயிருணர்ச்சியில் உள்ள உண்மையான துறவு,

விழிப்பாக இரு, மாணவனே! பொய்யெனக் கருதப் படும் துறவைத் துறந்து,

மெய்யெனக் கருதப்படும் துறவையே நீ கடைப்பிடி. மாணவன் : உண்மை வழியிலுள்ள துறவு பற்றி மேலும் எனக்கு அறிவுறுத்துங்கள்.

அதனை நான் ஏற்று, அவ்விதமே செயல்படுவேன். அதனால், பிழையான, தப்பான வழிகாட்டும் துறவை நான் புறக்கணிப்பேன்.

ஆசான் : நீ செய்யும் எந்தச் செயலிலிலும் கைம்மாறு கருதாதே.

நீ பாடுபட்டுச் செயல்படும் எப் பணியிலும் பரிசினை எதிர்பார்க்காதே.

ஆசைகளை அகற்றிவிட்டு உனது எல்லாக் கடமை களையும் அன்பார்வத்துடன் செய்.

அதுவே மெய்யான துறவு. உனக்கு ஏற்படவுள்ள ஆக்கத்தையோ இழப்பையோ கருத்தில் கொள்ளாதே.