பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வெற்றி மேல் வெற்றி பெற...

உனது செயல்களினால் இன்பத்தைப் பெறவோ துன்பத்தை நீக்கவோ நினைக்காதே.

செய்ய வேண்டியவற்றுக்குத் தேவையான எல்லா வற்றையும் நேர்மையாகவே செய்-இதுவும் மெய்யான துறவே.

உலகிலிருந்து உன்னைத் தவிர்த்துக் கொள்ளாதே, ஆனால், உலகத்திலும் அதன் இன் பங்களிலும் ஏற்படும் விருப்பிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்.

இவ் உலகில் உள்ள செயல்களை, உன் நலன்களைக் கருத்தில் கொண்டு செய்யாதே

மீண்டும், இதுவே மெய்யான துறவாகிறது. வெளியில் தோன்றும் பொருள்களால் ஒரு மனிதன் கெட்டவனாகி விடுவதில்லை;

அவனின் அகத்தில் உண்டாகும் கீழான ஆசைகளி னாலே மனிதன் தீயவனாகிறான்.

தன்னலத்தைப் பற்றிக் கொள்வதிலிருந்து விடுபடா திருப்பது அன்று, உலகைத் துறப்பது, இது பொயயான ه به ورته

இன்னல்கள் எழுவதுசெல்வங்களிலிருந்தோ வறுமையிலிருந்தோ, மனைவி யிலிருந்தோ மக்களிலிருந்தோ, ஆற்றலிலும் தொண்டி லிருந்தும் அல்ல.

சோம்பலில் இருந்தும் தன் விருப்பிலிருத்தும், பேராவிலிருந்தும் பிறர்பொருள்கள் மேல் அளவுகடந்த ஆசை வைத்திருப்பதிலிருந்தும்,

வெறுப்பிலிருந்தும் தற்பெருமையிலிருந்தும், இன்னல் கள் எழுகின்றன.