பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 75

உள்ளேயுள்ள தீமையைத் துற; அப்போது உலகத்தி லுள்ள பொருள்கள் உன்னைக் கெடுக்காது.

தன்னலம் பற்றிய எண்ணத்தைப் போக்கிவிடு அப்போது என்னதான்் நீ செய்தாலும் அது உனக்கு உளைச்சலைத் தராது,

உனது எல்லாக் கடமைகளிலும் தன்னல எண்ணத் தைப் போக்கு, அப்போது துன்பம் உன்னை வெற்றி கொள்ளாது.

எவன், தன் கடமையை மிகவும் இக்கட்டானது என எண்ணி அதனைச் செய்யாது விட்டு விடுகிறானோ

அதனால் மகிழ்ச்சி பெற விரும்புகிறானோ, எவன், பலம் கிடைக்குமென எண்ணி கவர்ச்சியூட்டும் காட்சியிலிருந்து தப்பி ஓடுகிறானோ;

எவன், பேரின்பம் கிட்டும் என நினைத்து தனது கடமைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொள்கிறானோ,

அவன் பொய்யான துறவறம் பூணுகிறான். அவன் ஏமாற்றப்படுகிறான், அதனால் தூய்மையான உள்ளத்தைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவனாவான்.

இறப்பு தவிர்க்க முடியாதது, உறுதியானது என அறிந்தும் தனது பதவியை விட்டு அகலாத போர் வீரனைப் போல,

தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ண வின்றித் தனது கடமையில் மட்டும் அவன் கருத்தாகவே இருப்பதுபோல,

தன்னலம் பற்றிச் சித்திக்காமல், மனந்தளராமல் தன் கடமைகனைச் செய்தவரறு எவன் உண்மையாகவே துறவு