பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி பெற...

ബഅ:

எழுச்சியுற வைக்கும் உண்மை

l

மகிழுங்கள்! பொழுது புலர்ந்தது... உண்மை நம்மை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டது!

கண்களோ விழிப்புற்றன. தவறெனும் இருள்படிந்த இரவு இனிமேல் வரப் போவதில்லை.

காலா காலமாக நிகழ்வுகளிலும் உணர்வுகளிலும் உறங்கிக்கொண்டே இருந்து விட்டோம்.

தொல்லை தரும் தீய கனவுகளில் நீண்ட காலமாகப் போராடினோம்; ஆனால் இப்போது ஊக்கத்திலும் உண்மையிலும் விழிப்புற்றோம்.

நல்லது எது என்பதைத் தெரிந்து கொண்டோம்; அதனால் தீமையுடன் நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டம் முடிவுற்றது.

நாம் உறங்கினோம், இருந்தும்கூட நாம் உறங்கினோம் என்பது நமக்குத் தெரியவில்லை.

நான் துன்புற்றோம், இருந்தும் நாம் எதற்காகத் துன் புற்றோம் என்பது நமக்குத் தெரியவில்லை.