பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 79

மாணவன் : நீரே எனது புகலிடமும், எனது இருப் பிடமும்,

எனது கண்கள் இறுதியில் உம்மில் ஒன்றித் தங்கிவிடும் என நான் அறிவேன்.

இறுதியில், எனது உள்ளம் உம்முடனேயே தங்கி விடும்.

உயர்வான, தூய்மையான வழியை எனக்குக் காட்டி விடும்.

உண்மைக்கான, கறையற்ற வழியையும் கூடக் காட்டி விடும்.

ஆசான் : உனது தூய்மைக்கும் நேர்மைக்கும் கேடு விளைவித்தவற்றிலிருந்து உன்னைக் கழுவியெடுதது அவற்றிலிருந் விடுதலை பெற நீ அணியமாயுள்ளாய்

ஒர் அழுக்கான ஏனத்தைப்போல் துப்பரவு செய்யப்படு வதற்கு நீ தகுதி பெறறு விட்டாய்;

நீ துப்பரவாக்கப்பட்டதும் உண்மை எனும் தண்ணிரி னால் நீ நிரப்பப்படுவாய்

கீழே தரப்படும் நான்கு பொருண்மைகளால் உனது உள்ளத்தைச் சீராக்கித் தூய்மையாகும்.

இன்பங்களுக்காகத் தீராத ஆசை கொள்ளுதல், உலகத்திலுள்ள நிலையற்ற பொருள்களைப் பற்றிக் கொள்ளுதல்,

தன்னலம் கருதுதல்,

தனக்கு உரிமையானவை, தொடர்ந்தும் அவ்விதமே உரிமையாக இருக்க வேண்டும் என்று பேரவாக் கொன்

ஆளுதல்: