பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வெற்றி மேல் வெற்றி பெற...

இனிமேல் நீ தன்னலம் அற்றவன், நீ உண்மை யானவன்,

அழிவற்ற, என்றும் நிலைக்கும் வழியிலேயே உனது செயல்கள் அமையும்.

மனித இனத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகி விடுவாய்.

மாணவன் : ஒ, ஆசிரியரே! இப்போது உமது உண்மை உருவிலே உம்மைக் காண்கின்றேன்;

மொழிகளால் விளக்க முடியாத உமது அழகையும் புகழையும் காண்கிறேன்.

உம்மைக் காணும் இடத்தில் எப்படி இருளால் குடி கொள்ள முடியும்?

துயரமும் துன்பமும் உம்மை எப்படி நெருங்கும்?

உமது பெருமை வாய்ந்த ஆற்றலின் ஒளியால் நான் அதிக வெளிச்சத்தைப் பெற்றுள்ளேன்.

நீரே உண்மை! நீரே நிலையானவர்!

உம்மை எவன் அறிகின்றானோ அவனே உமது ஒளியில் வாழ்பவன்.

ஒளிமயமான செயல்களையே புரிவான், இருனான வற்றையன்று.

ஒ, தலைவனே! நேர்மையான நெறியை எனக்குச் கட்டிக் காட்டும்;

நிறைவான வாழ்க்கைக்கான மதிப்பு விக்க பொருள் களை எனக்கு வெளியிடுங்கள்,