பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 85

நிலையானதின் வழியில் செயல்படுவது எவ்வாறு என்பதை எனக்குக் கற்பியுங்கள். அப்போதுதான்் அதில் நான் தவறாமலும் விழிப்பாகவும் இருப்பேன்.

ஆசான் : தன்னலச் செயல்களைச் செய்பவனே நேர்மையற்றவன்;

உண்மைச் செய்கைகளைக் கைக் கொள்பவனே நேர்மையானவன்

நேர்மையற்றவன், அவனின் உணர்வுகளினால் அடித்துச் செல்லப்படுகின்றான்;

தேவைகளும் தேவையற்றவையுமே அவனின் ஆண்டைகள்;

ஒரவஞ்சனையும் வெறுப்பும் அவனது கண்களைக் குருடாக்குகின்றன;

ஆசைப்படுதலும் துன்பப்படுதலும்,

அவாக்கொள்தலும் துயர்படுதலும்,

அவனுக்குத் தன்னலத்தை அடக்குவது பற்றித் தெரி யாத காரணத்தினால் ஏற்படுபவை.

அதனால் அவன் பெரிதும் ஆறுதல் இன்மையை அடைகின்றான்.

நேர்மையானவனே அவனின் மன நிலைகளுக்குத் தலைவன்.

அவனால் விலக்கப்பட்ட விருப்புகளும் வெறுப்புகளும் அவனுக்குச் சிறுபிள்ளைமையே.

தவறான எண்ணங்களையும் ஒரவஞ்சனை காட்டு வதையும் அவன் ஒதுக்கி வைத்துள்ளான்.

வெ-6