பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 87

நீ செய்யும் எல்லாவற்றிலும் உனது இன்பத்திற்காகவும், வேகுமதிக்குமாகவுமின்றி மற்றவரின் நன்மையையும் உலகின் நன்மையையும் கருத்தில் கொள்.

இனிமேல் நீ மாந்தர்களிடமிருந்து பிரிக்கப்பட்டோ விடு விக்கப்பட்டோ இருக்க மாட்டாய்;

எல்லோருடனும் நீ ஒருவன்; இனிமேல் உனக்காக மற்றவர்களுக்கு எதிரிடையாக திற்காதே.

ஆனால், எல்லோர் மேலும் பரிவும் இரக்கமுங்கொள்; என்னையும் உனது எதிரியாகக் கருதாதே. எல்லா மனிதர்களின் நண்பன் நீ. எல்லோருடனும் இணக்கமாக இரு; உயிருள்ள எல்லாவற்றின்மேலும் கருணை கொள்; எல்லையில்லா அறம் உனது மொழிகளையும் செயல் களையும் அழகுபடுத்தட்டும்

அதுவே உண்மையின் மகிழ்ச்சியான வழி. அறிவு நிலையாகவுள்ளவருக்கு அதுவே இசைவான .ெ-யல்கள்.

சரியான முறையில் செயல்படுபவர் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்புகிறது.

மாற்றம் அடையாததும் மறைந்து போகாததுமான கொள்கைகளுடனேயே அவன் செயல்படுகின்றான்;

தனிப்பட்ட ஆளுமையை விலக்குவதன் மூலம் அவன் ஒர் ஆற்றலாகின்றான்;

அந்த நிலையான பொருளுடன் அவன் ஒருவனாகி ஆறுதல் அற்ற நிலையைத் தாண்டி விடுகின்றான்.