பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற் றி யாருக்கு P போவர். அவ்விதம் தெரு ஒரமாகப் போகும் பொழுது எதிரே வயோதிகர், பாலர், பெண்கள் ஆகியோர் வரக் கண்டால், அவர்கட்கு அந்த கல்ல பாதையை விட்டுவிட்டு ஆடவர் தாங்கள் சேற்றில் இறங்கி நடப்பர். மழைக் காலத்தில் நடப்பதற்கு ஏற்ற நல்ல வழிகள் வீட்டுச் சுவர்ப் பக்கமாக இருந் தமையால், பிறர்க்காக கல்ல பாகத்தை விட்டு விலகி நடப்பதை ஆங்கிலத்தில் பிறர்க்குச் சுவர் தருதல் என்.l) கூறுவது மரபு. இப்பழக்கம் நிலைபெற்றிருந்த அந்தப் பழைய காலத்தில் அங்கே செஸ்டர்பீல்டு என்னும் திரு காமத்தையுடைய ஒரு பிரபு இருந்தார். ஆங்கில நூற் கல்வி அற்பமாக அட்ைந்தவரும் அவர் பெயரை அறிவர். அக்காலத்தில் பிரபுக்கள் வெறும் செல்வர் மாத்திரம் அல்லர். சிற்றரசர் போலவே செல்வத்தில் திளைத்தும், செல்வாக்கில் மிகுந்தும் வாழ்ந்துவந்தனர். அவர்கள் மிகப் பழமையான கீர்த்தி பெற்ற பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் பேரறிஞர்களாக வும், சிலர் மதி மந்திரிகளாகவும், சிலர் அசகாய சூரர்களாகவும் விளங்கிவந்தனர். அத்தகைய அறிஞர் கோஷ்டியில் சேர்ந்த பிரபுக்களில் ஒருவர் செஸ்டர்பீல்டு. செஸ்டர்பீல்டு எழுதியுள்ள நூல்களில் இது காறும் இறந்து படாமல் இங்கிலாந்தில் எல்லோ 3