பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ר * ei P Վf) Յl ,ി,ജ யாருககு தகுமோ? செவிக்கு உணவில்லாத போழ்தன்ருே சிறிது வயிற்றுக்கு இடச் சொல்லுகிருர் வள்ளுவர்?' என்று வினவினர். செவியுணவோ வாயுணவோ எது பெரிது என் பதைப் பற்றி நாம் இப்பொழுது விவாதிக்க வேண் டியதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனல் எதோ அரை குறையாக ஐந்தாறு நிமிஷம் கேட்டுவிட்டு வந்துவிட நாம் ஒரு நாளும் விரும்புவதில்லை. ஒரு காட்சிச் சாலைக்குள் நுழைந்தால் ஒவ்வொன்றையும் கன்ருய்ப் பார்த்து அதன் அழகைப் பருகிவிடவே விரும்புகிருேம். ஒரு வாயில் வழி சென்று பார்த்துக்கொண்டே மறு வாயில் வழி வந்துவிடுவதில்லை. அதுபோல் நான்கு மணி நேரமாய்த் தயார் செய்யப்பெற்ற நல்லுணவை நான்கு நிமிஷங்களில் விழுங்கிவிடுதல் என்பது சரியாகுமோ ? - என்று ஒரு சோம்பேறி பதில் கேள்வி கேட்டார். இவர் உணவு உண்ணும் விஷயத்தில் அரைச் சோம்பேறிதான். மற்ருெருவர் - அதோ இன்னும் உண்டு முடிக்கவில்லை - அவர் உடனே மென்று உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நலத்தைப் பற்றி விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார். சரி, இனி அவர் உண்டு எழுந்திருக்கவே போவதில்லை என்று எண்ணினேம். 94