பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியத்திற்கு வழி அவர்கள் வாயை நீர் கொண்டு கழுவுவதுகூட இல்லையே. அடிக்கடி பல் துலக்குவோர்க்கெல்லாம் பல் நல்ல ஸ்திதியில் இருக்கிறதோ? இவ்விதமாகப் பலபல எண்ணங்கள் எழுந்தன. அதன் பயனுக, இனி நாம் வைத்தியரின் ஆராய்ச்சி உண்மைகள் என்று கூறுபவற்றை வேதவாக்காக எண்ணி நடக்கவேண்டியதில்லை ; எப்பொழுதும் போல் நமது இஷ்டம் போல் கடக்கலாம்; ஆரோக் கிய விதிகள் என்பவற்றைச் சிறிதும் கவனியாது கடப்பவரே வெகு வருஷங்கள் வாழ்கின்றனர்; இதுவே சரியான மார்க்கம் என்று தீர்மானித்தேன். இது விபரீதமான முடிவு என்று நீங்கள் கருத லாம், பேசலாம். ஆனல் அனுஷ்டானத்தில் - வாழ்க்கையில் - பெரும்பாலோர் இந்த முடிவைத் தானே லட்சியமாக வைத்துக்கொண் டிருக்கின்ற னர் 1 97