பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? தோர், கரித்திரர் வாழும் இடம் அல்லவா ? உழவர் வீடுகளில் துழைந்து பார்த்தேன். பள்ளர் பறையர் சேரிகளில் புகுந்து தேடினேன். தோட்டிகள் குடிசைகளிலும் பார்த்தேன். அங்கே அன்னையின் அடிகளைக் காண முடியவில்லை. ஏதோ அவற்றின்அம்சத்தில் ஒரு சிறிதே இடையிடையே காண முடிந்தது. * இவர்களிலும் தாழ்ந்தோர், தரித்திரர் யார்? அவர்களிடையேதான் பாத தரிசனம் கிடைக் குமோ? அத்தகையோரைக் காண்பது எங்கே ? எப்பொழுது ? இவ்வாறு நாள்தோறும் எண்ணிக் கவலையுற்றேன். பலவிதமான இடங்களுக்குப் போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு. ஆல்ை எங்கும் தாழ்ந்தோரைக் காண முடிய வில்லையே! பாத தரிசனப் பாக்கியம் எங்கு வாய்க்குமோ ? அன்னே பாரதத்தின் அழகு முடியை எளிதில் கண்டுவிட்டேன். அதைக் காண நான் தேடி அலைய வில்லை. அதுவாகவே நான் இருக்குமிடம் தேடி வந்து காட்சி அளித்துவிட்டது. காங்கள் யாரும் மகாத்மா காந்தியடிகளுக்கு அழைப்பு அனுப்ப வில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், அவரா கவே எங்கள் ஊருக்கு எழுந்தருளினர் ; நாங்கள் கண்குளிரக் கண்டுகொண்டோம். 100