பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு: ருடைய இல்லங்களிலும் இருந்து இதோபதேசம் செய்துகொண்டிருப்பது செஸ்டர்பீல்டு மகளுக்கு வரைந்த கடிதங்கள் என்னும் பெயருடையதாகும். இக்கடிதங்கள் எவரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய தெளிவான நடையில் எழுதப்பெற்றன. இவற்றில் விவரிக்கப்படும் விஷயங்கள் பல. படிப் போர்க்கு இவை அறிவைப் பெருக்கும்; உற்சாகம் ஊட்டும்; கம்பிக்கை நல்கும். கார் காலத்தில் ஒரு நாள் ஆசிரியர் செஸ்டர் பீல்டு சேறு நிறைந்த ஒரு தெருவின் ஓரமாகப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வேருெருவர் அதே ஒரமாகவே கடந்து வந்து கொண்டிருந்தார். அவர் இளைஞர், வெகு முறுக் கான தோற்றமுடையவர். பிரபுவின் சமீபம் வந்த தும் அவர் விலகவில்லை. ஒய், எனக்கு விலகவேண் டாமா ? நான் போக்கிரிகளுக்குச் சுவர் கொடுப் பது வழக்கமில்லை! என்று கோபமாகக் கூறி இரைந்தார். அப்பொழுது செஸ்டர்பீல்டு, ஆல்ை, அது எனக்கு வழக்கம் என்று கூறி, உடனே விலகிக் கொண்டார்.