பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு P பொத்தி அடக்க ஒடுக்கமாக அயலே ஒதுங்கி நிற்பர். நான் ஏதேனும் கேட்க ஆரம்பித்தால் மட்டுமே பேசுவர். நான் அவர் பக்கம் திரும் பாமலே இருந்துவிட்டாலும் அப்படிச் செய்ய லாமோ என்று கேட்கவும் மாட்டார். அதற்காகக் கோபித்துக்கொள்ளவும் மாட்டார். நான் கேட்க அவர்கள் மறுமொழி தரும் பொழுது நான் கோபித்தால் வருந்தமாட்டார். பேசியது போதும், நிறுத்தவும் என்ருல் உடனே நிறுத்திவிடுவர். நான் கூப்பிட்டவுடன் வருவர், வந்தவுடன் அவரைப் போகலாம் என்று கூறினலோ, உடனே போய்விடுவர். இது நியாயமா என்று கேட்டு நிற்பதில்லை. நான் இட்டதே சட் 'ம் என் இறப்படி நடப்பதே அவர்கள் விருப்ப மும் கடமையும் ஆகும். சில வேளைகளில் நான் அவர்களைக் கீழே தள்ளிவிடுவதும் உத்தரவிடுவதும் உண்டு. அப் பொழுதேனும் அவர்கள் மலர் முகம் வாடுவது உண்டோ ? கைகேயி காட்டுக்குப் போகும்படி கட்டளையிட்ட பொழுது காகுத்தன் முகம் விளங்கிய தைப் போலவே சித்திரத்தில் அலர்ந்த தாமரைக்கு நிகராக விளங்கும். அடித்தாலும் வைதாலும் எனக்குச் சேவை செய்வதிலேயே அவர்கள் கண் னுங் கருத்துமா யிருப்பார்கள். 8