பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நண்பர்கள் ஆயினும் அவர்களைத் தரித்திரமான தனவந்தர் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்காக இாங்கவும் வேண்டும். என்ன துன்பங்கள் ஏற்பட்டாலும் - என்ன சஞ்சலங்கள் தோன்றிலுைம் அவர்கள் அருகே இருந்து ஆறுதல் மொழிகள் கூறி, உள்ளத்தில் விசேஷ ஊக்கமும் உற்சாகமும் உண்டாக்கிவிடுவர். அவர்கள் முன்னிலையில் சோர்வு, பயம் எதுவும் தோன்ரு. அவர்கள் உதவியால் தேவலோகம் கூடப் போய் வரலாம் ; சூரிய ஒளியில் குளிக்கலாம் ; அண்ட கோடிக ளிடையில் திரிக் து வரலாம். என் வீட்டில் இந்த உயர்ந்த நண்பர்கள் தங்கு வதற்காக ஒரு தனி அறை உண்டு. இந்த அறையை நான் பெரியோரின் ஆன்மாக்கள் வாழும் புண்ணிய ஸ்தலமாகவே எப்பொழுதும் மதிப்பேன். இந்த அறைக்குள் நுழைந்துவிட்டாலே போதும் சுற்றி லும் அறிவு மணம் கமழும். இந்த அறைதான் என் னுடைய சர்வகலாசாலை. என் கண்பர்கள் இங்கே இருக்கும்வரை எனக்கு எளிமை இல்லை. இத்தகைய நண்பர்களைத்தான் பெரிய இராஜ்யங்களைவிட ஏற்ற முடையவர் என்று ஷேக்ஸ்பியர் போன்ற மேதாவிகள் பாராட்டி யிருக்கின்றனர். இவ்வளவு அபூர்வமான நண்பர்கள் எனக்கு இருப்பது கேட்டு யாரும் அழுக்காறு அடைய வேண்