பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எனது கார் தான் சொல்லப்போகும் கார் தமிழ்ச் சொல் அன்று. அதல்ை நான் கார் என்றவுடன் மேலே விண் ணில் மேகத்தைப் பார்க்க வேண்டாம். அல்லது கண்களை மூடிக்கொண்டு இருள் என்று எண்ணிவிட வேண்டாம். இக்காலத்தில் சாதாரணமாக ஜனங் கள் கார் என்னும் மொழியை எந்தப் பொரு ளில் உபயோகிக்கிருர்களோ அதே பொருளில் தான் நானும் உபயோகிக்கிறேன். எனது கார் என்பது எனது மோட்டார் கார்தான். என்னிடம் மோட்டார் கார் ஏதும் இருக்குமா என்று திகைக்க வேண்டாம். போர்டு', ஷெவ் ரோலட் போன்ற கார் வாங்க என்னிடம் பணம் கிடையாது. ஆனல் என் கார் இவைகளைப் போன்ற தன்று. இவைகளைவிட ஏற்றமுடையதாகும். அம் மட்டோ? மோட்டார் கார்களில் தலை சிறந்தது ரோல்ஸ்ராய்ஸ்’ என்பர். அதைப் பார்க்கிலும் ஆயிர மடங்கு உயர்ந்ததாகும் எனது கார். ஆயிர மடங்கு என்று கூறியதுகூடத் தவறு தான். என் காரின் மேன்மையை யாராலும் 13